உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூர் திருக்காஞ்சி கோவிலில் பிரதோஷம்

வில்லியனூர் திருக்காஞ்சி கோவிலில் பிரதோஷம்

வில்லியனூர்: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று (மார்ச்., 18ல்) நடந்தது. மாலை 4:30 மணியளவில் துவங்கிய பிரதோஷ சிறப்பு விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்பிரகாரத்தில் உலா நிகழ்ச்சியை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !