சிவகங்கை உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :2434 days ago
சிவகங்கை:சிவகங்கை உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாட்களும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். நாளை (மார்ச்., 20ல்) காலை 5:00 மணியிலிருந்து 6 :00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 21ம் தேதி இரவு 9:00 மணிக்கு பூப்பல்லக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம், மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.