திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :2567 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று (மார்ச்., 18ல்) பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறுஅபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.காளை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
திருவெற்றியூர் வான்மீகநாதர், தொண்டி ஏகாம்பரேஸ்வரர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தேஸ்வரர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.