வடமதுரை உற்ஸவ விழா
ADDED :2433 days ago
வடமதுரை:தென்னம்பட்டி நடுத்தெரு கவரா நாயுடு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட எல்லம்மாள் கோயில் உற்ஸவ திருவிழா நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய திருவிழாவில் கரகம் ஜோடித்தல், கணபதி ஹோமம், பொங்கல் வைத்தல், சிறப்பு வழிபாடு, அன்னதானம் என பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதி நாளில் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.