உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சோலைமலை முருகனுக்கு மார்ச் 21 பாலாபிஷேகம்

மதுரை சோலைமலை முருகனுக்கு மார்ச் 21 பாலாபிஷேகம்

மதுரை:அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21 பாலாபிஷேகம் நடக்கிறது.செயல் அலுவலர் மாரிமுத்து கூறியதாவது: மார்ச் 21 காலை 10:00 மணிக்கு 108 பால்குடங்கள் பக்தர்கள் மூலம் மலை அடிவாரத்திலுள்ள 18 ம் படி கருப்பணசுவாமி கோயிலிலிருந்து பாதயாத்திரையாக சோலைமலை மண்டபம் முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்படும். பகல் 12:00 மணிக்கு முருகன், ஸ்ரீவள்ளி மற்றும் தேவசேனாவிற்கு பாலாபிஷேகம் நடக்கும். பின் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !