உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் கவிலட்சுமி நரசிம்ம சுவாமி தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஓசூர் கவிலட்சுமி நரசிம்ம சுவாமி தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள, கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 15ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 11ல் துவங்கியது.

தினமும் சுவாமிக்கு அபி ஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) மாலை, 6:00 மணிக்கு ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இஸ்கான் கீர்த்தனை, இரவு, 7:30 மணிக்கு கஜேந்திர மோட்சம், 9:00 மணிக்கு பஜனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 20ல்) காலை, 11:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். கோவிலின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மதியம், 2:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நடந்தது. இன்று (மார்ச் 21) இரவு, 12:00 மணிக்கு முத்து பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !