உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா

கொடுமுடி மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா

கொடுமுடி: கொடுமுடி மலையம்மன் கோவில், பங்குனி ரத்தோற்சவ தேர்த்திருவிழா கடந்த, 12ல் தொடங்கியது.

தினந்தோறும், காலையில், சூரிய பிரபை நிகழ்ச்சியும், இரவில் பலவித வாகனங்களில், மலையம்மன் திருவீதி உலாவும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு, அம்மன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை, 9:15 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர்வடம் பிடித்து இழுத்தனர். இன்று, (மார்ச்., 21ல்)வேல் ஊர்வலம், கருப்பண சுவாமிக்கு பால் பொங்கல், வசந்த உற்சவம், நாளை விடையாத்தி உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !