அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை பூச்சாட்டுதல்
ADDED :2432 days ago
அந்தியூர்: அந்தியூரில் உள்ள, பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை, இன்று (மார்ச்., 21ல்) மாலை, பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 21 நாட்களுக்கு பின், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், ஏப்.,2ல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி, 10ல், குண்டம் திருவிழா நடக்க உள்ளது. இதற்காக, கோவில் வளாகம் முன், பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.