பெரியநாயக்கன்பாளையத்தில் அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் திருவீதியுலா
ADDED :2430 days ago
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்து வரும் பிரமோற்சவத்தின் நான்காம் நாளில் பெருமாள், ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த, 16ம் தேதி துவங்கியது. கோவில் வளாகத்தில் தினசரி மதியம் திவ்ய பிரபந்த சேவாகாலம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.பிரமோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) மாலை பெருமாள், அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.