உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் எக்கலாதேவி அம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்

ராஜபாளையம் எக்கலாதேவி அம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த சேத்தூர் எக்கலாதேவி அம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி கொடி மரத்திற்கு பால், தயிர், பன்னீர், தேன்,சந்தனம் அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 30ல் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோயில் விழா குழுத்தலைவர் மும்மூர்த்தி, பொருளாளர் மாரிமுத்து, அறங்காவலர் சுப்பிரமணி யன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !