மேலூர் அ.வல்லாளபட்டி பொங்கல் விழா
ADDED :2403 days ago
மேலூர்: மேலூர் அருகே அ.வல்லாளபட்டி அரியப்பன்பட்டியிலுள்ள வடக்குவா செல்லியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது.பங்குனி முதல் தேதியிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். எட்டாம் நாள் ஆன நேற்று (மார்ச்., 22ல்) மந்தையில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெங்கலப்பானையில் பொங்கல் பொருட்களை சுமந்து ஒன்றரை கி.மீ., தூரத்திலுள்ள செல்லியம்மன் கோயில் சென்றனர். அங்கு பொங்கல் வைத்து தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.