மேலூர் பங்குனி திருவிழா
ADDED :2449 days ago
மேலூர்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மேலூர் மில்கேட், புலிமலைப்பட்டி முருகன் கோயில்களில் வழிபாடுகள் நடந்தன.செம்மினிபட்டி ஆண்டிபாலகர், கம்பூர் கருங்குட்டு கருமலை முருகன் கோயில்களிலும் பங்குனி திருவிழா நடந்தன. அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.