உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றம்!

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றம்!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் வெள்ளி தேரோட்ட திருவிழா துவங்கியது. நேற்று முதல் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று (3ம் தேதி) மார்க்கெட் ரோடு, கள்ளிப்பாளையம், சேரன் நகர், சக்தி விநாயகர் கோவில் பகுதி, ஜோதிநகர் மற்றும் செம்பாகவுண்டர் காலனி ஆகிய பகுதிகளிலிருந்தும், நாளை (4ம் தேதி) கோட்டூர் ரோடு, திருநீலகண்டர் வீதி, கிருஷ்ணசாமி லே-அவுட், சூளேஸ்வரன்பட்டி, ஏ.பி.டி., பகுதி மற்றும் கண்ணப்பன் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர். வரும் 5ம் தேதி குமரன் வீதி, வ.உ.சி., வீதி, எஸ்.ஆர்.எம்.எஸ்., மில் வீதி, ராஜாமில் ரோடு, சேரன்நகர், சின்னாம்பாளையம், வெங்கடேசாகாலனி, நாச்சிமுத்துகவுண்டர் வீதி மற்றும் உடுமலை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பக்தர்களும், கடைசி நாளான வரும் 6ம் தேதி கோவை ரோடு, தில்லை நகர், உடுமலை ரோடு, குமரன்மில், கோட்டூர் ரோடு, தெப்பகுளம் வீதி, மார்க்கட் ரோடு, நேதாஜி ரோடு மற்றும் பல்லடம் ரோடு உட்பட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர். விழாவையொட்டி, இன்று (3ம் தேதி) காலை 10.00 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி வெள்ளி தேரோட்ட விழா துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !