கூடலூர் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம்
ADDED :2493 days ago
கூடலூர் : கூடலூர், இரண்டாவது மைல் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு விழா கொடி ஏற்றப் பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு வேடன் வயல் ஆற்றிலிருந்து அம்மன் குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (மார்ச்., 22ல்), காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 11:30 மணிக்கு வேடன்வயல் ஆற்றிலிருந்து, பறவை காவடி ஊர்வலம் துவங்கியது.
பக்தர்கள் பால்குடத்துடன், வேல் பூட்டியும், பறவை காவடி பூட்டியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (மார்ச்., 23ல்) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர்.