கிருஷ்ணகிரி சித்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி
ADDED :2777 days ago
கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று (மார்ச்., 24ல்)மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி விநாயகருக்கு, 555 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஹா தீபாராதனை களுடன் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.