உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் விநாயகர் கோவில் ஆண்டு விழா

பல்லடம் விநாயகர் கோவில் ஆண்டு விழா

 பல்லடம் : பல்லடத்தை அடுத்த, அல்லாளபுரம் ஸ்ரீசெல்வ சக்தி விநாயகர் கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.முன்னதாக, ஆண்டு விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. கலச பூஜை, நவகிரக ஹோமம் உள்ளிட்டவையும் நடந்தன. மாலை, 5 மணி முதல், சிறப்பு வழிபாடுகள், மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.மூலவர் ஸ்ரீசெல்வ சக்தி விநாயகர், இளநீர், தயிர், பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அருகம்புல், மற்றும் மலர்களால், மூலவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை மற்றும் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !