அவலூர்பேட்டையில் இடும்பன் பூஜை
ADDED :2756 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர விழா நிறை வடைந்தது.மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 12ம் தேதி துவங்கி, 21ம் தேதி தேர் உற்சவமும், அடுத்த நாள் இரவு முத்துப் பல்லக்கும், 23ம் தேதி இரவு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் தெப்பல் உலா உற்சவமும் நடந்தது.இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நடந்த இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திர விழா நிறைவடைந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.