நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :2394 days ago
நாமக்கல்: நாமக்கல், கருப்பட்டிபாளையத்தில், ஆண்டுதோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும். நடப்பாண்டு திருவிழா, கடந்த, 12ல் துவங்கியது. 18ல் மறு காப்பு கட்டுதல், 22 முதல், தினந்தோறும் இரவு அபிஷேகம், அலங்காரம், காலை, பூவோடு சுற்று வருதல் நடந்தன. இன்று (மார்ச்., 26ல்) இரவு, 7:00 மணிக்கு வடிசோறு, மாவிளக்கு; நாளை (மார்ச்., 27ல்) இரவு மாவிளக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும், 28 காலை, 10:00 மணிக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், மாலை, 3:00 மணிக்கு காட்டேரி வேடம் ஊர்வலம், பொங்கல், மாவிளக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. 29 காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீர், இரவு, 7:00 மணிக்கு மறு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.