உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு பத்ர காளியம்மன் கோயில் பொங்கல் விழா

பாலமேடு பத்ர காளியம்மன் கோயில் பொங்கல் விழா

அலங்காநல்லுார்: பாலமேட்டில் பத்ரகாளியம்மன், மாரியம்மன், கருப்பசாமி, ஐந்துமுக விநாயகர் கோயில்களின் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கரும்பு தொட்டில், அங்கபிரதட்சனம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்தினர். இரவு மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின் மாரியம்மன், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !