அருணாசலேஸ்வரர் தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி
ADDED :2397 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 21ல், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து தினமும் கல்யாண மண்டபத்தில் நலங்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு குமரகோவிலில் மண்டகபடி உற்சவம் நடந்தது.