உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டினத்தில் 300 ஆண்டு பழமையான அய்யனார் சிலை

பெரியபட்டினத்தில் 300 ஆண்டு பழமையான அய்யனார் சிலை

பெரியபட்டினம்:பெரியபட்டினம் ஜலாலியா நகரை சேர்ந்தவர் மவுலத் தம்பி. இவர் புதுவீடு கட்டி வருகிறார். வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்புவதற்காக நேற்று காலை 11:00 மணிக்கு கூலி வேலையாட்கள் மூலம் தோண்டியுள்ளார். அப்போது 3 அடி ஆழத்தில் வெள்ளை கருங்கல் பாறையால் செதுக்கப்பட்ட அய்யனாரின் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.பீடத்தில் இருந்து 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. மண்ணில் இருந்து மீட்கப்பட்ட அய்யனார் சிலையின் அருகே பூரண, புஷ்கலா தேவியர்களின் சிலை இல்லாமல் அய்யனார் மட்டுமே தனியாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பெரியபட்டினம் வி.ஏ.ஓ., சிவபாலநாதன், ஆர்.ஐ., கந்தகுமாரியிடம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். சிலையை மீட்டு, கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பபிதாவிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !