தேவகோட்டை மாரியம்மன் கோவில் பங்குனி விழா
ADDED :2398 days ago
தேவகோட்டை: தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பங்குனி விழா 19 ந்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் அபிராமி, காமாட்சி என எட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தினந்தோறும் மாலை அம்மன் கரகம் முக்கிய வீதிகளில் வலம் வந்து பூஜைகள் நடந்தன. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அக்னிசட்டி ஊர்வலமும் நடந்தன.நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம், பறவைகாவடி,வேல்காவடி எடுத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.