உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் : கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது. திருப்பூர், காலேஜ் ரோட்டில் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், திருப்பணிகள் நிறைவுற்று, ஏப்., 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.

மதுரை, திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில், யாகசாலை அமைத்து, 48 குண்டம் வைத்து சிறப்பு யாகபூஜை நடத்தப் படுகிறது.

யாகசாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடு களை, திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, செயலாளர் கணேஷ், பொருளாளர் துரைசாமி, துணை தலைவர் ராஜாமணி உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !