இடையார்பாளையம் சொர்ண பைரவர் கோவிலில் பைரவர் ஹோமம்
ADDED :2391 days ago
புதுச்சேரி:இடையார்பாளையம் சொர்ண பைரவர் கோவிலில் மகா மந்திர ஜெபம் நடந்தது.புதுச்சேரி - கடலூர் சாலை தவளக் குப்பம் அடுத்த இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி,
நேற்று (மார்ச்., 28ல்) மாலை 4.30 மணிக்கு சொர்ண ஆகார்ஷன பைரவ மகா மந்திர ஜெபம், சொர்ண ஆகர்ஷன பைரவர் ஹோமம் நடந்தது. மகா சொர்ண பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.