சின்ன திருப்பதி கோவிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
சென்னை: அம்பத்துார், சின்ன திருப்பதி, பெருமாள் கோவிலில், உலக நன்மைக்காக, ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், நாளை விமரிசையாக நடக்க உள்ளது.
சென்னை, அம்பத்துார், லெனின் நகர், சின்ன திருப்பதியில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.அங்கு ஆண்டுதோறும், புரட்டாசி மாத விழா, நவராத்திரி உற்சவம் ஆகியவை, விமரிசையாக நடத்தப்படுகின்றன. நாளை மாலை, 3:30 மணிக்கு, கோவில் ஆழ்வார் மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு, திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.லோக ஷேமத்திற்காக நடத்தப்படும் இந்த வைபவத்தில், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், சீர்வரிசை ஊர்வலம், மாலை மாற்றுதல் வைபவம், தீபாராதனை, திருமாங்கல்ய தாரணம், ஊஞ்சல், திருவாராதனம், கோஷ்டி ஆகியவை நடக்கின்றன.இதற்கான ஏற்பாடுகளை, பகவான் நாம பிரசார சாரிடபுள் டிரஸ்ட், பக்த ஜன சபா டிரஸ்ட், ஸ்ரீ சக்தி மண்டலி ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.