வளவனுார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2746 days ago
விழுப்புரம்: வளவனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடக்கிறது.
விழுப்புரம் அடுத்த வளவனுார் அக்ரஹாரத்தில், வேதவல்லி சமேத லட்சுமிநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு மாதமும், திருவோணம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. பங்குனி மாத திருவோணம் நட்சத்திரமான நேற்று மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வளவனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ஆராவமுதன் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.