உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தான கோவில் கன்னியாகுமரியில் அமைகிறது!

திருப்பதி தேவஸ்தான கோவில் கன்னியாகுமரியில் அமைகிறது!

சென்னை : தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானாவில் குருஷேத்ரா, மகாராஷ்டிராவில் மும்பை ஆகிய இடங்களில் திருமலை திருப்பதி கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகே, ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் அமைய உள்ளது. புதிய கோவில்கள் அமைப்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் கே.பாபிராஜூ மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பதி ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயார் கோவில்கள் அமைக்கப்படும். இந்த கோவில்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை அருகே, ரூ.22.5 கோடி செலவில் அமையும். அதேபோல், அரியானா மாநிலத்தில் குருஷேத்ரா, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலும் திருமலை கோவில்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !