உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் வாசியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கண்டாச்சிபுரம் வாசியம்மன் கோவில் நுழைவு வாயில் மற்றும் மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல்கால பூஜைகள் நடைபெற்று நேற்று முன்தினம் காலை இரண்டாம் காலபூஜை மற்றும் பூர்ணாஹூதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 8:30 மணியளவில் கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. மாலை வாசியம்மன், அய்யனார், காத்தவராயன் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா ராமலிங்கம், உபயதாரர் ஆறுமுகம் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !