உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் செயலாளர் தேர்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் செயலாளர் தேர்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளராக சக்கரவர்த்தி தீட்சிதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை, பொது தீட்சிதர்களின் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில், 2019-2020 ஆண்டுக்கான பொது தீட்சிதர்கள் செயலாளராக பாலகணேசன் என்கிற சக்கரவர்த்தி தீட்சிதர், துணை செயலாளராக நவமணி தீட்சிதர், தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களது பதவிக்காலம் 2020 மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !