ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் விழா துவக்கம்
ADDED :2409 days ago
ராஜபாளையம்: துரோபதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்தில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு விரதத்தை துவக்கினர்.
ராஜபாளையத்தில் உள்ள இக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு கொடி மரம், அம்மனுக்கும், சந்தனம், பன்னீர், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட 18 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விழா தொடங்கியதையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஏப்., 13ல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் ஷியாம் உப தலைவர் சேது, செயலாளர் ரமேஷ், பொருளாளர் சீனிவாசன் செய்துள்ளனர்.