உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் உண்டியலில் ரூ.3.21 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியலில் ரூ.3.21 கோடி

பழநி, பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் ரூ. 3 கோடியே 21 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாகும்.

பழநி முருகன் கோயிலில் கடந்த மார்ச் 15 முதல் 24 வரை பங்குனி உத்திர விழா நடந்தது. இதனால் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடந்தது. இரண்டாம் நாளாக தங்கம் -270கிராம், வெள்ளி 26 ஆயிரத்து 550 கிராம், வெளிநாட்டு கரன்சி- 233 கிடைத்துள்ளது. முதல்நாள் எண்ணிக்கையில் கிடைத்த ரொக்கம் ரூ. 2கோடியே 7 லட்சத்து 10ஆயிரத்து 60 உடன் சேர்த்து, மொத்தம் ரூ. 3 கோடியே 21 லட்சத்து 95ஆயிரத்து 690 கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட இருமடங்கு அதிகம். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலைக்கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !