உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தகிரியில் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

காந்தகிரியில் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆர்.கே.பேட்டை : காந்தகிரி மலையடிவாரத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று (ஏப்., 4ல்) வியாழக்கிழமையை ஒட்டி, சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் தரிசனம் நடந்தது. நூற்றுக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர்.அம்மையார்குப்பம் அடுத்த, காந்தகிரி மலையடிவாரத்தில் உள்ளது சாய்பாபா கோவில். இங்கு, நித்திய பூஜைகள் நடந்து வருகின்றன. வியாழக்கிழமைகளில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் நடக்கிறது.நேற்று (ஏப்., 4ல்), காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகமும்., அதை தொடர்ந்து, மகா தீபாராதனையும் நடந்தது. அம்மையார்குப்பம், யக்னாபுரம், மோசூர், சந்திரவிலாசபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !