மதுரையில் பலராமர் கோயிலில் இலவச வகுப்புகள் ஏப். 14ல் துவக்கம்
ADDED :2417 days ago
மதுரை: மதுரை திருப்பாலை ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு பகவான் கிருஷ்ணர் குறித்து கற்பிக்கும் இலவச வகுப்புகள் ஏப்., 14 துவங்குகிறது.இந்த வகுப்புகள் மே 30 வரை நடக்கும். 7 முதல் 15 வயது வரை ஆண் குழந்தைகள் பங்கேற்கலாம். தினமும் காலை 7:00 முதல் பகல் 1:30 மணி வரை வகுப்புகள் நடக்கும். முடிந்த பின் பிரசாதம், ஸ்நாக்ஸ் வழங்கப்படும். குறைந்தபட்சம் தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
இவ்வகுப்பில் கடவுள், குரு, சாதுக்கள், பெற்றோர், மூத்தவர்களை மதித்தல், தன்சுத்தம், புறசுத்தம் பேணுதல், பிரபுபத வகுப்புகளை கேட்க, பிரபுபத புத்தகங்களை படிக்க, கிருஷ்ணரை உணர்ந்துகொள்ளும் அடிப்படை தத்துவம், சமையலின் அடிப்படை, வீடு, கோயிலில் ஜெபிக்கும் முறைகள் கற்றுக்கொடுக்கப்படும். இதில் பங்கேற்க 82205 88754ல் முன்பதிவு செய்யலாம்..