உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுகாதியை முன்னிட்டு தர்மபுரி கோவிலில் சிறப்பு பூஜை

யுகாதியை முன்னிட்டு தர்மபுரி கோவிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி: யுகாதி பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் வரும், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  தெலுங்கு வருட பிறப்பான நேற்று, தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00  மணிக்கு, சவுடேஸ்வரி அம்மனுக்கு, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, இனிப்பு போளி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல்,  மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும், யுகாதியை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !