உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை விழா

ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை விழா

புன்செய்புளியம்பட்டி: யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஊத்துக்குளி அம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புன்செய்புளியம்பட்டி, ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை, நேற்று காலை, அபிஷேக பூஜையுடன் துவங்கியது. கோவில்  வளாக பகுதியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். இதையடுத்து மாவிளக்கு எடுத்து, நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பின்னர் ஊத்துக்குளி அம்மன் உற்சவர், சப்பரத்தில் கோவில் உலா சென்றார். பண்டிகையின் சிறப்பு அம்சமாக, பழத்துடன்  நாட்டுச்சர்க்கரை, வேப்பம்பூ கலந்த பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த அன்னதானத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !