உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கபாலீஸ்வரர் கோவில் கோசாலைக்கு புது வரவு

கபாலீஸ்வரர் கோவில் கோசாலைக்கு புது வரவு

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கோசாலைக்கு, புது வரவாக, காங்கேயம் பசு வந்துள்ளது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் கோசாலை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆறு பசு மாடுகள் இருந்தன. வயது முதிர்வால், பழநி  தண்டாயுதபாணி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, அறநிலையத்துறை கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு, காங்கேயம் நாட்டு பசுமாடு ஒன்று, கோவில் சார்பில் வாங்கப்பட்டது. ஒரு கன்றுக்குட்டி ஈன்றது. இது தரும் பாலே, கோவிலில்  பாலாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு காங்கேய பசுமாடு, வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறும்போது, கோவில் அபிஷேகத்துக்கு, பால் அதிகமாக தேவைப்படுவதால், மேலும் ஒரு காங்கேயம் இன பசு  வாங்கப்பட்டுள்ளது. விரைவில் கோபூஜைக்கும் அழைத்து வரப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !