காட்டுவனஞ்சூரில் சீதாகல்யாண வைபவம்
ADDED :2408 days ago
சங்கராபுரம்: காட்டுவனஞ்சூரில் சீதாகல்யாண வைபவம் நடந்தது. சங்கராபுரம் வட்டம், காட்டுவனஞ்சூரில் ராமபக்த மண்டலி சார்பில் 44ம் ஆண்டு ஸ்ரீராமநவமி கற்போற்சவம் கடந்த 4ம் தேதி துவங்கியது. தினசரி காலையில் ஸ்ரீராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு சென்னை காமகோடி பக்த அவதார மண்டலியினரின, அஷ்வபதி, திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று 7ம் தேதி காலை உஞ்சவிருத்தி, ஸ்ரீ சீதாகல்யாண வைபவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராமபக்த மண்டலி தலைவர் வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.