உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.


மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில்,  தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக, பெரிய குளக்கரையிலிருந்து அலகுகளுடன் கலசத்தில் சக்தி ஆவாகனம், அலங்காரம், தீபாராதனை செய்து, தேவாங்கர் குல வீரகுமாரர்கள் கைகள் மற்றும் மார்பில் கத்தி போட்டவாறு, ஆவேச முழக்கமிட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு, மழைவேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !