இளையனார் வேலூரில் பாலசுப்ரமணியசுவாமி கோவில் ஏப்., 10ல் கொடியேற்றம்
ADDED :2407 days ago
காஞ்சிபுரம்: இளையனார்வேலூர் பாலசுப்ரமணியசுவாமி கோவில் பிரம்மோற்சவம், ஏப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இளையனார்வேலூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவம், ஏப்., 10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு, திருக்கேடயம் உற்சவம் நடைபெறுகிறது.காலை, மாலையில், பாலசுப்ரமணிய சுவாமி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வருகிறார்.ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம், ஏப்., 16ல் விமரிசையாக நடைபெறுகிறது. 19ல், பூப்பல்லக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சம் நிறைவு பெறுகிறது.