உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரைவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரைவிழா கொடியேற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை 10:00 முதல் 10:25 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி அம்பாள் கேடயத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஏப்.9) 2 ம் திருவிழாவில் காலை 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணிக்கு சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. ஏப்.17 ல் மாப்பிள்ளை அழைப்பு, இரவில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதை தொடர்ந்து பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏப்.18 ல் தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !