உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சொக்கநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழா ஏப்., 5 ல் ராணி சேதுபதிநாச்சியார் தேங்காய் தொடல் நிகழ்ச்சியும், இரவு வனசங்கரி அம்மன்க காளியூட்டம் நிகழ்ச்சி நடந்தது. பின் ஏப்., 7 ல் காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, இரவு வாசல் விநாயகர் வழிபாடு நடந்தது. நேற்று காலை அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு துவஜாரோகணம் கொடியேற்றம் நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின் கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது. திருவிழா நாட்களில் அம்மன் மீனாட்சி, காமாட்சி முருகனுக்கு சக்தி வேல் வழங்கும் காட்சி, திருஞானசம்பந்தருக்கு திருமுலை ஞானப்பால் ஊட்டல், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, அம்மன்தபசு கோலம், ஆகிய அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏப்., 15 ல் அம்மனுக்கு பட்டாபி ஷேகம், மறுநாள் திக் விஜயம், ஏப்., 19ல் தீர்த்தவாரி, சுவாமி திருவீதியுலா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகச்செயலாளர் கே.பழனிவேல்பாண்டியன், சரக அலுவலர் ராமு, விசாரணைதாரர் கண்ணன், ஜி.மனோகர குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !