உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை காரங்காடு ஆலயத்தில் நற்கருணை ஆராதனை

திருவாடானை காரங்காடு ஆலயத்தில் நற்கருணை ஆராதனை

திருவாடானை:தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது.

மார்ச் 5ல் துவங்கி நேற்று (ஏப்., 8ல்) மாலையுடன் முடிந்தது. நிகழ்ச்சியை புளியால் பாதிரியார் ஜேம்ஸ் துவக்கி வைத்தார். இயேசுவின் பாடுகளின் பயணம், மரியாயின் சேனை, நோயாளிகள் மந்திரிப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன.

தொண்டி, ஆர்.எஸ்,மங்கலம், புளியால் போன்ற பல பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காரங்காடு பாதிரியார் சாமிநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !