அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :2708 days ago
அலங்காநல்லூர்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் நேற்று (ஏப்., 8ல்) பங்குனி மாத கார்த்திகை விழா நடந்தது. சஷ்டிமண்டப வளாகத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.