உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல்

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல்

உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா, இன்று (ஏப்., 9ல்) நோன்பு சாட்டு தலுடன் துவங் குகிறது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும் திரளாக மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோவில் தேரோட்டத்தை காண மற்ற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் திரண்டு வருகின்றனர். நோன்பு சாட்டுதலில் துவங்கி, 17 நாட்கள் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு தேர்திருவிழா, இன்று (ஏப்., 9ல்), நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மாலை, 4:00 மணிக்கு பூச்சொரிதல் மற்றும் மாலை, 6:00 மணிக்கு நோன்பு சாட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !