உடுமலை ஐயப்ப சுவாமி கோவிலில் 14ல் 108 சங்காபிஷேகம்
ADDED :2489 days ago
உடுமலை:மடத்துக்குளம், கணியூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் சித்திரை திருநாளில் 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
மடத்துக்குளம் அருகே கணியூரில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருநாளையொட்டி, ஏப்., 14ம்தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும், மழை வேண்டி அன்று, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.சித்திரை திருநாளில், காலை, 5:30 மணிக்கு கனி தரிசனம், காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமிக்கு 24 வகையான மூலிகை அபிஷேகம், காலை, 9:30 மணிக்கு மழைவேண்டி, 7 வகையான தீர்த்த அபிஷேகம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. இதில் கணியூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கலந்து கொள்கின்றனர்.