கன்னிவாடி ராமலிங்கசுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை
ADDED :2599 days ago
கன்னிவாடி:கார்த்திகையை முன்னிட்டு, தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகத் துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. தோணிமலை முருகன் கோயில், தருமத்துப் பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் கார்த்திகை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.