கரூர் முத்துமாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு நீரூற்றி வழிபாடு
ADDED :2409 days ago
கரூர்: கரூர் தான்தோன்றிமலை முத்துமாரியம்மன் மற்றும் பகவதியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 31ல் அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் பாலித்து வந்து, கம்பம் நடுதல் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும், கோவில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு, பக்தர்கள் நீரூற்றி வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்., 7ல்) இரவு, பகவதியம்மனுக்கு அமராவதி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து எடுத்து வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.