நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் கோயில் சுவாமி நகர்வலம்
ADDED :2408 days ago
நத்தம்: நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் கோயில் விழாவை முன்னிட்டு சுவாமி நகர்வலம் சென்றார். நேற்று (ஏப்., 8ல்) காலை கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. நத்தம்-செந்துறை ரோடு அவுட்டரில் குதிரை, மதலை சிலைகளுடன் வந்த சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மாரியம்மன் கோயில், பெரியகடைவீதி, அண்ணாமலை செட்டியார் இல்லம், காளியம்மன் கோயில், மார்க்கெட் வழியாக நகர்வலம் சென்று மீண்டும் சேர்வீட்டிலுள்ள கோயிலை அடைந்தார். சேர்வீடு ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.