உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத்திருவிழா கொடியேற் றம் நடந்தது. ஆண்டிபட்டியில் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நேற்று (ஏப்., 28ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்ஸவருக்கு பல்வேறு சமுதாய மக்கள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சியில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில் பிரகாரத்தில் சுவாமி உலா வந்து அருள்பாலிப்பார்.

ஏப். 17-ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து விருந்தும் நடைபெறும். ஏப். 18- நிறைவு நாளில் தைப்பூச பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் கொடி இறக்கம், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் சந்திரசேகரன், செயல் அலுவலர் அருள் செல்வன் , பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !