கூடலூரில் மழை வேண்டி காளியம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED :2395 days ago
கூடலூர்: கூடலூரில் பாரதியார் தெரு சங்கத்தின் சார்பில் காளியம்மன் கோயில் விழா நடந்தது. இதில் மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
மழைக்காக பிரார்த்தனை நடந்தது. சேவா பாரதியின் தென்மண்டல பொறுப்பாளர் வினோபா, உறுப்பினர்கள் சாந்தினி, சாரதா, மைதிலி ஆகியோர் குத்துவிளக்கு பூஜை நடத்து வதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினர்.அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். காளியம்மனுக்கு பாலாபிஷேகம், பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.
தொடர்ந்து சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டி, மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந் தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.